SMART NOTES

A.S.RAMANISELVAN.,
INDIAN VEDIC NADI ASTROLOGER & RESEARCHER.

LEARN! LEARN! LEARN!

No one motivates how to learn and what to learn.
Just we have to motivate ourselves to learn.

Wednesday 8 April 2015


SMART NOTES- ON VEDIC ASTROLOGY  பதிவு 1 

பாவத் பாவம் (பகுதி 1) லக்கினத்தின் முக்கியத்துவம்

அனைவருக்கும் SMART NOTES-ன் இனிய காலை வணக்கம்.



என்னத்தான் ஒரு ஜாதகத்தில் திரிகோண அதிபதிகள் வலுவுடன் இருந்தாலும் பாவத் பாவம் முறையில் லக்கினாதிபதியின் பலமே ஒரு ஜாதகத்தின் அஸ்திவாரம் என்பதற்காகத்தான் இந்த பதிவு.

பாவத் பாவம் என்றால் என்ன?
(from house to house)

உதாரணத்திற்கு 
2வீட்டை எடுத்துக்கொண்டால் 2ம் வீட்டிலிருந்து 2ம் வீடாக வருவது 3ம் வீடு
4ம் வீட்டை எடுத்துக்கொண்டால் 4ம் வீட்டிலிருந்து 4ம் வீடாக வருவது 7ம் வீடு.
etc.

ராசிகள் vs வீடுகள் ஒரு ஒப்பீடு.
ஒற்றைப்படை ராசிகள் என்பது மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இரட்டைப்படை ராசிகள் என்பது ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம்

ஆனால் ஒற்றைப்படை வீடுகள் என்பது எந்த லக்கினமாக இருந்தாலும் லக்கினத்திற்கு லக்கினம், 3ம் வீடு, 5ம் வீடு, 7ம் வீடு, 9ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகள் ஒற்றைப்படை வீடுகள் என்பதை அறிக.

மற்றைவையெல்லாம் இரட்டைபடை வீடுகள்.லக்கினத்திற்கு 2ம் வீடு, 4ம் வீடு, 6ம் வீடு, 8ம் வீடு, 10ம் வீடு, 12ம் வீடுகள் இரட்டைப்படை வீடுகள் என்ப்படும்.


பாவத் பாவத்தின் சிறப்பு என்ன?
01. பாவத் பாவத்தின் சிறப்பு என்பதே ஒற்றைப்படை வீடுகள் தான்.
ஏனென்றால் நமக்கு கெடுதல் செய்யும் எல்லா இரட்டைப்படை வீடுகளும் ஒற்றைப்படை வீடுகளை தான் சார்ந்து வருவது தான். கெட்டவன் எல்லாம் நல்லவனை சார்ந்து விட்டால் நமக்கு நல்லது தானே.

லக்கினத்தை தவிர்த்து ஒவ்வொரு பாவமும் இன்னொரு பாவத்தை சார்ந்து தான் இருக்கும்.

2க்கு 2ம் மிடம் =‍ 3ம் மிடம்
8க்கு 8ம் மிடம் ‍= 3ம் மிடம்

3க்கு 3ம் மிடம் = 5ம் மிடம்
9க்கு 9ம் மிடம்= 5ம் மிடம்

4க்கு 4ம் மிடம் = 7ம் மிடம்
10க்கு 10ம் மிடம் = 7ம் மிடம்

5க்கு 5ம் மிட்ம் = 9ம் மிடம்
11க்கு 11ம் மிடம் = 9ம் மிடம்

6க்கு 6ம் மிட்ம் = 11ம் மிடம்
12க்கு 12ம் மிடம் = 11ம் மிடம்

7க்கு 7ம் மிடம் = லக்கினம்

இதில் ஒரு ஒத்துமையாக
5க்கு 5ம் மிட்ம் = 9ம் மிடமாகவும் 
9க்கு 9ம் மிடம்= 5ம் மிடமாகவும்
வருவதை பாருங்கள்

ஒரு ஜாதகத்தில் திரிகோண கிரகங்கள் லக்கினாதிபதியுடன் தொடர்பு கொண்டால் ஜாதகத்தில் உள்ள எல்லா வீடுகளும் பாவத் பாவம் முறையில் தொடர்பு கொண்டுவிடும். அவை நல்லதா இருந்தால் இருமடங்கு ஏத்தியும் கெட்டதாக இருந்தால் இருமடங்கு குறைத்தும் செய்யும் அதாவது ஜாதகருக்கு எதாவது பிரச்சினை என்று வந்தால் அது அவனுக்கு சாதகமாக முடியும் அல்லது முடித்துக்கொள்வான்.

திரிகோண அதிபதிகள் லக்கினாதிபதியுடன் தொடர்பு கொண்டால் எல்லா வீடும் எப்படி சம்பந்தப்படும் என்று கீழே பாருங்கள்.

எப்படி?
2க்கு 2ம் மிடம் =‍ 3ம் மிடம்
8க்கு 8ம் மிடம் ‍= 3ம் மிடம்

3க்கு 3ம் மிடம் = 5ம் மிடம்
9க்கு 9ம் மிடம்= 5ம் மிடம்

5ம் மிடம் = திரிகோணம்

ஆக 2ம் வீடு, 8ம் வீடு , 3ம் வீடு 
இவை எல்லாம் 5ம் வீட்டின் 
அதிபதியின் கீழ் வருகிறது.


6க்கு 6ம் மிட்ம் = 11ம் மிடம்
12க்கு 12ம் மிடம் = 11ம் மிடம்

5க்கு 5ம் மிட்ம் = 9ம் மிடம்
11க்கு 11ம் மிடம் = 9ம் மிடம்

9ம் மிடம் = திரிகோணம்

ஆக 6ம் வீடு, 12ம் வீடு, 11ம் வீடு 
இவை எல்லாம் 9ம் வீட்டின் 
அதிபதியின் கீழ் வருகிறது.


அதனால் திரிகோண அதிபதிகள் லக்கினாதிபதியுடன் சம்பந்தப்பட்டால் ஜாதகத்தில் உள்ள எந்த தசை நடப்பில் இருந்தாலும் அது ஜாதகனுக்கு சாதகமாக இருக்கும்.ஜாதகனுக்கு யோகத்தை வாரி வழங்குகின்றன.

ஆனால் விதி வலியதாயிற்றே

என்னத்தான் திரிகோணாதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஜாதகனுக்கு யோகத்தை வாரிவழங்கினாலும் லக்கினாதிபதி கெட்டால் எல்லாம் கெடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏன் லக்கினாதிபதி கெட்டால் எல்லாம் கெடும்?
லக்கினாதிபதி கெடும் போது திரிகோண அதிபதிகளும் தங்கள் பலத்தையும் சேர்ந்து இழந்துவிடுவார்கள். ஏன்?

5க்கு 9ம் மிடம் = லக்கினம்
9க்கு 5ம் மிடம் ‍= லக்கினம்

ஆக திரிகோணாதிபதிகள் என்னத்தான் வலுவுடன் இருந்து ஜாதகனுக்கு யோகத்தை வழங்க காத்து இருந்தாலும் லக்கினாதிபதி கெட்டதால் திரிகோண அதிபதிகள் தங்கள் பலத்தில் ஒரு பாதியை இழப்பதால் ஜாதகனுக்கு யோகம் பாதியாக குறைந்துவிடும்.

சரி யோகம் தான் பாதி குறைந்தாலும் மீதி பாதி தான் இருக்கிறதே என்றால் அதுவும் நடக்காது
ஏன்?

லக்கினம் எந்த வீடுகளுக்கு கெல்லாம் நேரடித் தலைவன் என்று பாருங்கள்.
4க்கு 4ம் மிடம் = 7ம் மிடம்
10க்கு 10ம் மிடம் = 7ம் மிடம்
7க்கு 7ம் மிடம் = லக்கினம்

4ம் வீடு, 7ம் வீடு, 10ம் வீடு. சுகம், மனைவி, தொழில் ஆகிய மூன்றும் மறைமுகமாக‌ பாவத் பாவம் முறையில் பாதிப்படைவதால் ஜாதகர் நிம்மதி அடையமுடியாது அல்லது ஜாதகர் இவற்றை எப்படி மேம்படுத்துவது எப்படி என்று ஏங்கி ஏங்கியே நொந்துகொள்வான்.

லக்கினாதிபதி கெட்டு திரிகோன அதிபதிகள் லக்கினாதிபதியுடன் தொடர்பு பெறாமல் தங்களுக்குள் தொடர்பு கொண்டால் ஜாதகன் யோகத்தை முழுமையாக அனுபவிக்க மாட்டான்.

விதி விலக்காக லக்கினாதிபதி கெட்டு எவ்விததிலாவது திரிகோண அதிபதிகளின் தொடர்பு பெற்றால் ஜாதகரை சிறு வயதில் கஷ்டப்படுத்தி பிற்வயதில் நன்றாக இருக்க வைத்துவிடும்.

லக்கினாதிபதி வலுபெற்று திரிகோண அதிபதிகளின் தொடர்பும் பெற்ற ஜாதகன் இவ்வுலகத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி வாழ் வாங்கு வாழுவான் என்பது நிச்சயம்.

நன்றி

FMR - RAMANISELVAN SELVAMANI M.A, B.Ed